புதுச்சேரி: கார்த்திகை மாதம் தொடக்கத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
கார்த்திகை மாதம் தொடங்க இருக்கிற காரணத்தினால் பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்.
By : Bharathi Latha
கார்த்திகை மாதம் என்றாலே இறை வழிபாட்டிற்கு உரிய மாதம் ஆகும். இந்த ஒரு மாதத்தில் தான் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும், முருகன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து மலைக்கு செல்வார்கள். அதன்படி நாளை வியாழக்கிழமை அன்று கார்த்திகை மாதம் பிறக்கிறது. அன்று காலை புதுவை பாரதிபுரம் ஐயப்பன் கோவில், மணக்குள விநாயகர் கோவில், அரியங்குப்பம் அய்யனார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் மாலைகள் அணிந்து வழிபாடு செய்வார்கள்.
இதன் காரணமாக புதுச்சேரி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் புதுச்சேரியில் அமைந்துள்ள பெரிய மார்க்கெட்டில் துளசி ருத்ராட்சம் ஆகிய மாலைகளை வாங்கி செல்கிறார்கள். மேலும் இருமுடி கட்ட தேவையான பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மார்கெட் பகுதி பெரும் கூட்டல் நெரிசலாகவும் காணப்படுகிறது.
இதனால் தற்போது மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. துளசி மாலை ரூ.50 முதல் ரூ.85 வரையும், ருத்ராட்சம் மாலை ரூ.80 முதல் ரூ.100 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
Input & Image courtesy: Thanthi News