புதுச்சேரி: மலிவு விலையில் மளிகை பொருள் வழங்கும் திட்டம்!
புதுச்சேரியில் மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க சார்பில் தொடங்குகிறது.
By : Bharathi Latha
புதுச்சேரியில் மலிவு விலையில் மளிகை பொருள் வழங்கும் பெரிய திட்டம் ஒன்று தயாராகி வருவதாக பா.ஜ.க மாநில தலைவர் சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். புதுச்சேரியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் மாநில தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்த கருத்தை முன்வைத்து இருக்கிறார். அப்பொழுது அவர் கூறுகையில், ஏழை மக்களுக்கு உணவு பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மானிய பயனாளிகள் வங்கி கணக்கில் மாதம் தோறும் பத்தாம் தேதிக்குள் வரவு வைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
புதுச்சேரியில் 1.68 லட்சம் சிவப்பு ரேஷன் கார்டுகள் மூலம் 6.74 லட்சம் பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுகிறார்கள். உதாரணமாக ஒரு குடும்பத்தில் நான்கு பெயர் இருந்தால் அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக பணப்பரிமாற்றம் திட்டத்தின் கீழ் 700 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இதே போல் மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாநில அரசின் அரிசிக்கான பணமாக மாதம் தோறும் 300 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. அரிசி இல்லாமல் மல்லிகை பொருட்கள் வழங்கும் பெரிய திட்டம் ஒன்று உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மத்திய அரசுத் திட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் நேரடியாக மக்களுக்கு சென்று அடையும் வகையில், விடுப்பட்டோருக்கு உதவும் வகையில் மாநில நிர்வாகிகள் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. விரைவில் மக்கள் சந்திப்பு இயக்கம் இயக்கத்தை மாநிலம் முழுவதும் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Hindu Tamil