Kathir News
Begin typing your search above and press return to search.

சாலை அமைக்க பூமி பூஜை: புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைப்பு!

சாலை அமைக்க பூமி பூஜை: புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  12 May 2022 4:02 AM GMT

மணவெளி தொகுதி சட்டமன்ற உறுதிப்பினர் நிதியிலிருந்து பூரணாங்குப்பம் கிராமத்தில் அமைந்திருக்கும் ரோஜா நகர், சாமியார் நகர், கோவிந்தம்மாள் நகர், கந்தசாமி நிகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தார் சாலை மற்றும் கருங்கல் சாலைகள் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ளது.

இந்நிலையில், சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று (மே 11) காலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி சபாநாயகரும், தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் ராமு, கிருஷ்ணமூர்த்தி, சக்திபாலன், சக்திவேல், மணி, லட்சுமிகாந்தன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Source, Image Courtesy: Malaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News