Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவல் தீவிரம் - நீண்ட விடுமுறையை அறிவித்த அரசு!

குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவும் தீவிரம் அதிகமானதால் புதுச்சேரி காரைக்காலில் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை.

புதுச்சேரியில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவல் தீவிரம் - நீண்ட விடுமுறையை அறிவித்த அரசு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Sept 2022 9:07 AM IST

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் காய்ச்சல் பரவி வருகின்றது. இதனால் அரசு மற்றும் தனியார் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருவதால் மாத்திரை மருந்து சாப்பிட்டு விட்டு பள்ளிகளுக்கு குழந்தைகள் சென்று வருகின்றனர்.


இதனால் கடந்த இரண்டு வாரங்களில் தொற்று பரவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில் காற்றில் பரவும் தீவிரத்தை சமாளிக்கும் வகையில் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காய்ச்சல் பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட கல்வித்துறைக்கு சுகாதாரத்துறை பரிந்துரைத்தது.


மேலும் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அதிக அளவில் குழந்தைகள் சிகிச்சைக்கு வருகின்றனர். எனவே ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை குறைந்தபட்ச காலம் ஆவது பள்ளிகள் மூடி மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நடவடிக்கை மூலமாக வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும். இந்நிலையில் புதுவை கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி விடுதுள்ள செய்து குறிப்பில் முதல் அமைச்சர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் உத்தரவின் பெயரில் புதுவை, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் 25ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை விடப்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy:Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News