ஜனாதிபதி தேர்தலுக்கு புதுச்சேரியில் ஏற்பாடுகள் தீவிரம்!
By : Thangavelu
புதுச்சேரி சட்டசபையில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகின்ற ஜூலை 18ல் நடைபெறுகிறது. இதற்காக ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களது ஆதரவுகளை கோரி ஒவ்வொரு மாநிலத்திற்கும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
அதன்படி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனாநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதற்காக திரவுபதி முர்மு கடந்த 2ம் தேதி புதுச்சேரிக்கு சென்று என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டினார். முதலமைச்சர் ரங்கசாமி உட்பட 10 என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், 6 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும், 3 பா.ஜ.க. ஆதரவு சுயேச்சைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திரவுபதி முர்முவை ஆதரிப்பதாக கூறியுள்ளனர். அதே போன்று எதிர்க்கட்சி வேட்பாளருக்கு புதுவையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் உள்ளனர். ஒரு எம்.பி. மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜனாதிபதி வாக்குப்பதிவு நடைபெறும் இடமான சட்டசபை செயலகத்தின் 4வது மாடியில் உள் கமிட்டி அறையில் நடைபெறுகிறது. வாக்குப்பெட்டி இதற்காக வருகின்ற ஜூலை 12ம் தேதி டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்காக சட்டசபை செயலாளரின் அலுவலகம் அருகே இருக்கின்ற அறையும் தயார் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த உடன் டெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi