Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் அமலாகிறது குடியரசுத் தலைவர் ஆட்சி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுச்சேரியில் அமலாகிறது குடியரசுத் தலைவர் ஆட்சி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுச்சேரியில் அமலாகிறது குடியரசுத் தலைவர் ஆட்சி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Feb 2021 5:21 PM GMT

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் தற்பொழுது அளித்துள்ளது. புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்த அமைச்சர்கள், காங்கிரஸ் MLA.க்கள் அடுத்தடுத்து தங்களது MLA பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில் மொத்த MLA. க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது.

இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆகவும், N.R.காங்கிரஸ் 7 ஆகவும், அ.தி.மு.க. 4 ஆகவும், நியமனம் 3 என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆகவும் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதலமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். அதை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக் கொண்டார். இதன்பின் புதுவை அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கையாக அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் புதுவையில் கடந்த 2 வாரமாக இருந்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்தது. மேலும் புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாராயணசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News