Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி காலையில் புதுச்சேரி வருகை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

பிரதமர் மோடி காலையில் புதுச்சேரி வருகை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

பிரதமர் மோடி காலையில் புதுச்சேரி வருகை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Feb 2021 10:03 AM GMT

பிரதமர் மோடி இன்று காலை புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை புரிவதையொட்டி பாதுகாப்பு நகரம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதே போன்று பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு புதுச்சேரி நகர் முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி இன்று (25ம் தேதி) புதுச்சேரிக்கு வருகையை முன்னிட்டு நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Next Story