புதுச்சேரி சிவன் கோவில்கள்: பிரதமர் மோடி நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு!
புதுச்சேரியில் சிவன் கோவில்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட மகா காலேஸ்வரர் கோவில் நிகழ்ச்சி விழா.
By : Bharathi Latha
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயிலின் முதல் கட்டப் புனரமைப்புபணிகளை பிரதமர் மோடி நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்தார். நாட்டில் அமைந்துள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் உஜ்ஜைன் நகரில் உள்ள மகா காலேஸ்வர் கோயிலும் ஒன்றாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகா காலேஸ்வர் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இந்த கோயிலை மகா காலேஸ்வர் லோக் என்ற பெயரில் ரூ.850 கோடியில் புனரமைக்க முடிவுசெய் யப்பட்டது. இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.
மகா காலேஸ்வரர் கோவில் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள சிவன் கோவில்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உஜ்ஜைனியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க 12 ஜோதிடர் லிங்கங்களில் ஒன்றான மகா காலேஸ்வரர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு நாட்டு அர்ப்பணிக்கப்பட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார். மேலும் இதற்கான நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் புதுச்சேரிகள் உள்ள அனைத்து சிவ தலங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. புதுவை காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்த நேரடி ஒளி பரப்பை எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.
Input & Image courtesy:News