இயற்கை விவசாயத்தில் அசத்தும் புதுச்சேரி சிறை கைதிகள்!
By : Thangavelu
புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தற்போது இயற்கை முறையில் விவசாயிகள் மற்றும் ஆடு, மாடுகளை வளர்த்து அசத்தி வருகின்றனர்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் 200க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் நல்ல வழியை அமைத்து கொள்வதற்காக அவர்களுக்கு பிடித்தமான தொழிலை சிறை அதிகாரிகள் சமூக அமைப்புடன் கற்றுக்கொடுத்து வருகின்றனர். அதன்படி கைவினைப் பொருட்கள் தயார் செய்தல், யோகா கற்றுக்கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில், சிறையில் அடைத்து வைக்கப்பட்ட கைதிகள் மீண்டும் தண்டனை காலம் முடிந்த பின்னர் வீடு திரும்பும்போது அவர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக புதிய திட்டத்தை சிறைத்துறை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நிலத்தில் கைதிகளுக்கு விவசாயம் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இயற்கை விவசாயத்தை பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் வாழை, மஞ்சள், அண்ணாச்சி உள்ளிட்டவைகளை சாகுபடி செய்துள்ளனர். அது மட்டுமின்றி மாடு, ஆடு, கோழி உள்ளிட்டவைகளும் வளர்த்து வருகின்றனர். விவசாய பணியில் ஈடுபடும் கைதிகளுக்கு தினமும் 200 ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது. மேலும், உற்பத்தியாகும் பொருட்கள் புதுச்சேரி சந்தைகளுக்கு எடுத்து செல்லப்பட்டு விற்பனையும் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: News 7 Tamil