புதுச்சேரியில் 1 முதல் 11ம் வகுப்பு வரை ஆல் பாஸ்.. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி உத்தரவு.!
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில், சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்றது. அதே நேரத்தில் சில மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

By : Thangavelu

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் 1ம் முதல் 11ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 12ம் வகுப்பை தவிர அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த உற்சாத்தில் உள்ளனர். தற்போது சட்டமன்ற பொதுத்தேர்தல் வேறு நடைபெற உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும்போது பிரச்சாரக்கூட்டங்களால் போக்குவரத்து சிரமம் ஏறபடும். இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சப்பட்டிருந்த நிலையில், ஆளுநர் உத்தரவு அனைவருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.