Kathir News
Begin typing your search above and press return to search.

கழிவுநீரில் விழுந்த மூதாட்டியை மீட்டு வீட்டில் பத்திரமாக சேர்த்த காவலர்!

புதுச்சேரி மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி ஒருவரை போலீசார் பத்திரமாக மீட்டு அவரை வீட்டில் சேர்த்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கழிவுநீரில் விழுந்த மூதாட்டியை மீட்டு வீட்டில் பத்திரமாக சேர்த்த காவலர்!

ThangaveluBy : Thangavelu

  |  12 Nov 2021 10:39 AM GMT

புதுச்சேரி மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி ஒருவரை போலீசார் பத்திரமாக மீட்டு அவரை வீட்டில் சேர்த்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீரில் மழை நீரும் சேர்ந்து செல்வதால் பலர் நடந்து செல்லும்போது தவறி விழுந்து விடுகின்றனர்.

அது போன்று மூலக்குளம் குண்டுசாலை கழிவு நீர் வாய்க்காலில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தவறி விழுந்து விட்டதாக புதுச்சேரி ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து அந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் சரவணக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவுநீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மூதாட்டியை காப்பாற்றினர்.

அவரை காவலர்கள் பத்திரமாக மீட்டு அவர் பற்றி விசாரித்தில் அவர் பெயர் சுந்தரி 70, என்பதும், அவருடைய வீடு மேரி உழவர்கரையில் இருப்பதாகவும் தெரியவந்தது. மேலும் மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வருவதும் தெரிந்தது. இதனையடுத்து மூதாட்டி சுந்திரியை பத்திரமாக இரண்டு காவலர்களும் வீட்டில் கொண்டு சென்று சேர்த்தனர். அவருக்கு புதிய உடை அணிவித்து சாப்பாடு கொடுத்துவிட்டு வந்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதும் பலரும் காவலர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News