புதுச்சேரி: 12 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை!
புதுச்சேரியில் தற்பொழுது 12 லட்சம் ரூபாயில் தற்பொழுது சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது.
By : Bharathi Latha
புதுச்சேரி வில்லியநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட தற்பொழுது ரமேஷ் நகர், ரங்கசாமி நகர், மணக்குள விநாயகர் நகரில் மொத்தம் 11 லட்சத்து 77 ஆயிரம் செலவில் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக இந்த சாலை அமைக்கும் பணியின் பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாய் சரவணக்குமார் மற்றும் தொகுதி எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பலரும் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்து இருக்கிறார்கள்.
நிகழ்ச்சியில் வெள்ளியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பிரிவு செயற்பொறியாளர் பாலமுருகன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் பலரும் இந்த சாலை அமைக்கும் பணிகள் தற்பொழுது கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
பல ஆண்டுகாலமாக இந்த ஒரு பகுதியில் சாலை இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்து இருக்கிறார்கள். குறிப்பாக மழை காலங்களில் இத்தகைய சாலைகள் இன்றி பல்வேறு பாதிப்புகளை சந்தித்ததாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த பகுதியில் மணல் சாலை வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். .
Input & Image courtesy :Daily Thanthi News