Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : சட்டசபை கட்டத்தின் மீது இடி தாக்கியதில் மதில் சுவர் இடிந்து விழுந்து 4 கார்கள் சேதம்.!

புதுச்சேரி : சட்டசபை கட்டத்தின் மீது இடி தாக்கியதில் மதில் சுவர் இடிந்து விழுந்து 4 கார்கள் சேதம்.!

புதுச்சேரி : சட்டசபை கட்டத்தின் மீது இடி தாக்கியதில் மதில் சுவர் இடிந்து விழுந்து 4 கார்கள் சேதம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Nov 2020 10:45 AM GMT

புதுச்சேரி சட்டப்பேரவை 100ஆண்டுகளுக்கு முன்பு பிரென்சுகாரர்கள் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது இதனிடையே போதிய இடமின்மை காரணமாக கடந்த 2006-ம் ஆண்டு 3 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் சட்டமன்றத்திற்கு பின்புறம் நுழைவு வாயிலும், முதல் தளத்தில் சட்டமன்ற செயலர் அலுவலகமும், 2-வது தளத்தில் அமைச்சரவை அலுவலகமும், 3 -வது தளத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் அலுவலகமும் கருத்தரங்க அறையும் உள்ளது. அதன் மேல் உள்ள மாடியில் குடிநீர் தொட்டிகள் பில்லர் அமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

அதன்படி இரவு மழை பெய்தது. அப்போது கடுமையாக இடி சத்தம் கேட்டது. இதில், சட்டமன்ற மைய மண்டபம் பின்புறம் உள்ள கட்டிடத்தின் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இடி தாக்கியது. இதனால் அந்த சுவர் சேதமடைந்து சரிந்து விழுந்தது. இதில், தரைத்தளத்தில் சபாநாயகர் அலுவலகம் மற்றும் சட்டமன்ற செயலர் பயன்படுத்தும் அலுவலக கார்கள் மீது இடிந்த சுவரின் சில பகுதிகள் விழுந்தது.

இதனால் அங்கிருந்த 4 கார்கள் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டமன்ற செயலர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அதிர்ஷ்டவசமாக மைய மண்டபம் இயங்கும் பழமையான கட்டிடத்தின் மீது இடி தாக்கவில்லை. அப்படி தாக்கியிருந்தால் அந்த கட்டிடமே முழுமையாக சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் இடி தாக்கியதால் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News