Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : தீபாவளியொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஊதியம்.!

புதுச்சேரி : தீபாவளியொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஊதியம்.!

புதுச்சேரி : தீபாவளியொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஊதியம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2020 10:10 AM GMT

தீபாவளியொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச உடைக்கு பதிலாக அவரவர் வங்கிக்கணக்கில் பணம் தர ரூ. 6.63 கோடிக்கும், பிஆர்டிசியில் ஊதியம் தருவதற்கு ரூ. 3.97 கோடிக்கான கோப்புக்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவில் தீபாவளியொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச துணிகளுக்குப் பதிலாக 1.32 லட்சம் பயனாளிகளுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் ரூ. 500 தர துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார். இதற்கு ரூ. 6.63 கோடி திட்டமதிப்பீடாகும்.

அதேபோல் பிஆர்டிசி (புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழகம்) ஊழியர்களுக்கு ஊதியம் தர ரூ. 3.97 கோடி தர ஒப்புதல் தந்துள்ளார். அதில் அவர் ஒரு அறிவுறுத்தலையும் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 2018ல் சமர்பிக்கப்பட்ட விஜயன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் பிஆர்டிசி செயல்பாட்டை மறுசீரமைக்க நீண்டக்கால மற்றும் குறுகியக்கால நடவடிக்கைகளை செயல்படுத்த இயக்குநர்கள் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News