Kathir News
Begin typing your search above and press return to search.

'புத்தகம்' நல்ல பாடத்தை கற்றுத்தரும்: தேசிய புத்தக கண்காட்சியில் ஆளுநர் தமிழிசை உரை!

வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளுக்கு புத்தகங்களில் பதில் இருக்கிறது. அது மட்டுமின்றி நல்ல பாடத்தையும் கற்றுக்கொடுக்கும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

புத்தகம் நல்ல பாடத்தை கற்றுத்தரும்: தேசிய புத்தக கண்காட்சியில் ஆளுநர் தமிழிசை உரை!

ThangaveluBy : Thangavelu

  |  27 Dec 2021 2:21 AM GMT

வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளுக்கு புத்தகங்களில் பதில் இருக்கிறது. அது மட்டுமின்றி நல்ல பாடத்தையும் கற்றுக்கொடுக்கும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

புதுச்சேரி எழுத்தாளர் புத்தக சங்கம் சார்பில் 25வது ஆண்டு தேசிய புத்தக கண்காட்சி கடந்த 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழா நேற்று (டிசம்பர் 26) நடைபெற்றது. இதில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினார். போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

இதன் பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: நான் புத்தகம் படிப்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவள். படிக்கும் பழக்கம் வாழ்க்கையில் ஒரு நல்ல பாடத்தை கற்றுத்தரும். என்னை புதுப்பிப்பது புத்தகங்கள் மட்டுமே. எனக்கு எவ்வளவு பணிகள் இருந்தாலும் ஒரு மணி நேரம் ஆவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளேன்.


தெலங்கானாவில் என்னை சந்திக்க வருபவர்களிடம் பூங்கொத்து அளிக்க வேண்டாம், புத்தகத்தை அளியுங்கள் என கூறியுள்ளார். அது மட்டுமின்றி கிராமங்கள் தோறும் நூலகங்கள் இருக்க வேண்டும். தெலங்கானா மாநிலத்தில் ஒரு தன்னார்வ நிறுவனம் கிராமங்களில் நூலகம் அமைக்கும் பணியை செய்து வருகிறது. அதே போன்று நமது புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் நூலகங்கள் வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News