Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: மத்திய அரசின் சுதேசி தர்ஷன்... ரூ. 200 கோடியில் புதிய சுற்றுலா தலங்கள்...

புதுச்சேரி: மத்திய அரசின் சுதேசி தர்ஷன்... ரூ. 200 கோடியில் புதிய சுற்றுலா தலங்கள்...
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 July 2023 5:29 AM

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சுதேசி தர்ஷன் திட்டத்தின்கீழ் சுமார் ரூ.200 கோடி மதிப்பீட்டில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் புதிய சுற்றுலா தலங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் புதுச்சேரி தற்பொழுது மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலங்களாக மட்டுமல்லாது நல்ல ஒரு சினிமா எடுப்பதற்கு தளமாகவும் இருந்து வருகிறது.


இதன் காரணமாக இவற்றை மேலும் ஏற்படுத்துவதற்கு மத்திய அரசின் திட்டங்கள் உதவி வருகிறது 200 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை உருவாக்க தனியார் நிறுவனங்களுடன் திட்ட ஆலோசகர் கூட்டம் பொது பணி துறையின் கீழ் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கி நடத்து வைத்திருக்கிறார் குறிப்பாக கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.


பாகூர் மணப்பட்டில் 100 ஏக்கர் நிலத்தில் பல்நோக்கு சுற்றுலா மையத்தை தனியார் பங்களிப்புடன் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுதேசி தர்ஷன் திட்டத்திற்காக ஒட்டுமொத்த திட்ட அறிக்கையும் விரைவில் தயார் செய்ய புதுச்சேரி அரசாங்கம் மும்மரம் காட்டி வருகிறது. இந்த ஒரு திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News