ஆளுநர் புதுவை மக்கள் நலன் கருதி செயல்படுகின்றார்.. பா.ஜனதா தொகுதி தலைவர் பாராட்டு..
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இணைந்து மக்கள் நலன் கருதி செயல்படுகிறார்கள்
By : Bharathi Latha
புதுச்சேரியில் ஆரியங்குப்பம் தொகுதியை சேர்த்த பாஜக தலைவர் செல்வகுமார் சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.அந்த ஒரு அறிக்கையில், "புதுவையில் கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி, துணை நிலை ஆளுநருடன் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தார். ஆனால் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். புதுச்சேரி அரசு நிர்வாகம் பிரதமர் மோடி அவர்கள் கூறியதைப் போல இரட்டை எஞ்சின் அரசாங்க போல சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவிற்குள் கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிரதமர் முடி தலைமையிலான மத்திய அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள்தான் ஆகிறது. அதுவும் புதுவையில் தேசிய ஜனநாக கூட்டணி ஆட்சிக்கு வந்து 2ஆண்டுகள்தான் ஆகிறது. இந்த ஒரு சூழ்நிலையில் கட்டண உயர்வு மற்றும் நிர்மல் செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக ஜிம்பர் இயக்குனரை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் பேசி இருக்க வேண்டும்.
ஜிப்மர் இயக்குனர் சம்மதிக்காமல் இருந்தாலோ, அல்லது தரும் விளக்கம் சரியானதாக இல்லாமல் இருந்தாலோ போராட்டம் நடத்தியிருக்கலாம். அதுவும் கூட ஜிப்மருக்கு செல்லும் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். இவைகளை செய்யாமல் அரசியலுக்காக போராட்டம் , நடத்துவது தவறு. இதை ஆளுநர் கண்டித்தது என்ன தவறு. ஆளுநர் மக்கள் நலன் கருதி தான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar