ஆசிய செஸ் போட்டி: புதுச்சேரி சிறுவன் தங்கம் வென்று அசத்தல்!
புதுச்சேரியில் 3-ம் வகுப்பு மாணவன் தங்கம் வென்று அசத்தல்.
By : Bharathi Latha
ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்:
ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன் நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்- மணிமேகலை தம்பதியின் மகன் ராகுல் ராமகிருஷ்ணன் என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தங்க பதக்கம் வென்று அசத்தினான். இந்தச் சிறுவன் புதுச்சேரியில் உள்ள பெத்தி செமினார் CBSE பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவில் நடந்த ஆசிரியர் யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் ராகுல் கலந்து கொண்டு விளையாடி இருக்கிறார். தங்கப்பதக்கம் பிலிப்ஸ் பிரிவில் பங்கேற்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனான ராகுல் 7 சுற்றுகளில் 6 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று அசத்து இருக்கிறார்.
காமன்வெல்த் செஸ் போட்டி:
மேலும் ரோபிட் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறார். இந்த ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற எம்.பி.எல் 34 ஆவது எட்டு வயது உட்பட்டவருக்கான தேசிய செஸ் ஓப்பன் நடைபெற்ற தேசிய பள்ளி செஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற இருக்கிற காமன்வெல்த் செஸ் போட்டியில் இந்தியா சார்பில் புதுச்சேரியை சேர்ந்த ராகுல் என்ற சிறுவன் பங்கேற்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Thanthi News