புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட பூ, காய்கறிகள் அறுவடை!
By : Thangavelu
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என்று 200க்கும் அதிகமானோர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சிறைச்சாலையில் கைதிகள் திருந்துவதற்காக சிறை நிர்வாகம் சார்பில் பல்வேறு வகையிலான தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதில் விவசாயம், யோகா, தியான வகுப்புகள் மற்றும் தையல் பயிற்சி உள்ளிட்ட ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அவர்களின் குடும்பத்தாருக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், சிறைச்சாலை வளாகத்தில் 36 ஏக்கரில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் கைதிகள் சமன் செய்து அதில் விவசாயம் செய்தனர். மூலிகை காய்கறி, பழம் வகைகள் உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டது. அதன்படி அறுவடை செய்யும் விழா சிறை வளாகத்தில் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர் வித்யா ராம்குமார், சிறை அதிகாரி சாமி வெற்றிசெல்வன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பார்வையிட்டனர். கைதிகள் பயிரிட்ட கத்தரிக்காய், மாங்காய், எலும்பிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி, பலா, வெண்டை உள்ளிட்டவைகளும் அறுவடை செய்யப்பட்டது.
Source, Image Courtesy: Malaimalar