Kathir News
Begin typing your search above and press return to search.

இன்று புதுச்சேரி முதலமைச்சர் பிறந்தநாள் ! மத்திய அமைச்சர் மற்றும் ஆளுநர் தமிழிசை வாழ்த்து !

முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இன்று புதுச்சேரி முதலமைச்சர் பிறந்தநாள் ! மத்திய அமைச்சர்  மற்றும்  ஆளுநர் தமிழிசை வாழ்த்து !

ThangaveluBy : Thangavelu

  |  4 Aug 2021 9:06 AM GMT

புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியின் 72வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி தனது வீட்டில் காலையில் பூஜையை முடித்து அருகே உள்ள நவசக்தி மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அவர் புதுச்சேரி சட்டமன்றத்திற்கு சென்று தனது அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை கூறினார். முன்னதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Source: Dinamani

Image Courtesy: Bjp Twiter

https://www.dinamani.com/india/2021/aug/04/puducherry-chief-minister-rangasamys-birthday-3673557.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News