செயலில் இறங்கும் புதுச்சேரி அரசு - குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹ 1000 உதவித்தொகை வழங்க முடிவு!
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்க முடிவு.
By : Bharathi Latha
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்பது பல்வேறு பெண்களின் கவனத்தை ஈர்த்தது என்று கூட சொல்லலாம். ஆனால் என்ன? தி.மு.க அரசு அதை இன்னும் செயல்படுத்தவில்லை. அது தான் தற்போது தமிழக பெண்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஆனால் அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான். இந்தப் ஒரு நடவடிக்கையாக தற்போது தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப பெண்களுக்கு ரூபாய் 1000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழ், வாழும் குடும்ப அட்டைதாரர்கள் குறிப்பாக குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் தோறும் உதவித் தொகை வழங்கப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அறிவித்துள்ளார். இதுவரை எந்த ஒரு அரசு உதவி பெறாத குடும்பங்களுக்கு மட்டும் இந்த ஒரு திட்டம் செயல்படுத்தப் பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு 10,696 கோடி மதிப்பிலான 2022-23 பட்ஜெட்டை இன்று அவர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பல்வேறு அம்சங்களை அறிவித்தார்.
விரைவில் புதுச்சேரியில் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் மற்றும் அதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் அவர்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தையும் வழங்கவுள்ளதாகவும் அவர் தன்னுடைய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
Input & Image courtesy: Polimer News