புதுச்சேரி: திமுக மாநில துணை அமைப்பாளர் ஆக்கிரமித்த நிலம் மீட்பு!
சுமார் ரூ. 7.7 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புதுச்சேரி நிலம் மீட்கப்பட்டு இருக்கிறது.
By : Bharathi Latha
புதுச்சேரியை சேர்ந்த வைத்தியநாதன் என்பவரின் தாயுடைய பல கோடி மதிப்புள்ள நிலத்தை தி.மு.கவை சேர்ந்த மாநில துணை அமைப்பாளர் ஆக்கிரமித்து இருக்கிறார். அவரிடம் இருந்துதான் தற்போது இந்த நிலம் மீட்கப் பட்டு இருக்கிறது. புதுச்சேரி வெங்கடா நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன் என்பவர் இவருடைய தாய் குப்புலட்சுமி. இவருக்கு சொந்தமான ஏழரை கோடியை 70 லட்சம் மதிப்புள்ள நிலம் ஒன்று லால்ஸ் பேட்டை கிருஷ்ணா நகர் மேற்கு பகுதியில் அமைந்து இருக்கிறது.
இந்த ஒரு நிலம் தான் தி.மு.க மாநில துணை அமைப்பாளர் குணா திலிப்பன் என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தை உருளையன்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்த தி.மு.க. மாநில துணை அமைப்பாளர் குணா திலிப்பன் ஆக்கிரமித்தார். எனவே தன்னுடைய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை அறிந்து குப்புலட்சுமி என்பவர் நில அபகரிப்பு பிரிவில் புகார் ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அவர்களின் உத்தரவின் பெயரில் தாசில்தார் ராஜேஷ் கண்ணா மற்றும் பல அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த இடத்தை தி.மு.க மாநில துணை செயலாளர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் இந்த இடம் குப்புலட்சுமி சொந்தமானது என்று மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் இது தொடர்பான நோட்டீஸ் குணா திலீபனுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர் தொடர்ந்து அந்த இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி வருகிறார். எனவே சட்டப்படி தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்க பட்டு அரசு தரப்பில் இருந்து உண்மையான உரிமையாளர் குப்புலட்சுமி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Thanthi News