புதுச்சேரியில் நடைபெறும் G20 மாநாடு - ஐந்து இடங்களில் 144 தடை உத்தரவு!
G20 மாநாடு நடைபெறும் ஐந்து இடங்களில் தற்போது 144 தடை உத்தரவு புதுச்சேரி அரசாங்கம் திருப்பித்து இருக்கிறது.
By : Bharathi Latha
டிசம்பர் 1ஆம் தேதி இந்தியா G-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்று இருக்கிறது. குறிப்பாக G20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்று பிறகு இந்தியா பல்வேறு மாநாடுகளை நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடங்குகிறது. அந்த வகையில் தொடக்கநிலை மாநாடு வருகின்ற 30 ஆம் தேதி தொடங்கி குறிப்பாக இரண்டு நாட்கள் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. எனவே இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் காரணமாக புதுச்சேரியில் ஐந்து இடங்களில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக G20 மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் தங்கும் விடுதிகள் மற்றும் மாநாடு நடைபெறும் இடங்கள் ஆகிய ஐந்து இடங்களில் தற்போது நாளை முதல் 144 தடை உத்தரவு இரண்டு நாட்கள் நீடிக்கும் என்றும் உத்தரவு நீடிக்கப்பட்டு இருக்கிறது. அதை வேளையில் மாநாட்டில் முன்னிட்டு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை இல்லை என்றும் தெளிவாக அரசாங்கம் தன்னுடைய அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் வருகின்ற 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் G20 மாநாட்டு இரண்டு நாட்களாக நடைபெற உள்ளது.
G20 மாநாட்டிற்கான லோகோவை வெளியிடும் நிகழ்ச்சி புதுச்சேரி காந்திதிடலில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தலைமையில் கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றது குறிப்பிடத் தக்கது. மாநாட்டில் விளம்பர பதாகைகள், அடையாள வில்லைகள், சுவரொட்டிகள் ஆகியவை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தலைமையில் புதுச்சேரி அரசாங்கம் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamani