பெண்களுக்கு அளிக்கப்பட்ட நேர சலுகை திரும்ப பெற முடியாது.. புதுவை ஆளுநர் தமிழிசை!
புதுச்சேரி அரசாங்கம் வழங்கிய பெண்களுக்கான இரண்டு மணி நேர சலுகை அறிவிப்பை திரும்ப பெற முடியாது.
By : Bharathi Latha
புதுச்சேரியில் இந்திய அஞ்சல் துறையில் அஞ்சல் கோட்டம் சார்பில் கைவினைஞர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான ஏற்றுமதி மற்றும் அஞ்சல் வழி ஏற்றுமதி மையம் பற்றிய அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வட்டம் முதன்மை அஞ்சல் துறை தலைவர் சாருகேசி வரவேற்றார். புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு அறிமுகக் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். இந்த ஒரு தொடக்க நிகழ்ச்சியின் போது ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தெற்கு மண்டல இணைய இயக்குனர் மற்றும் இணை ஜெனரல் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து இருந்தார்கள்.
இக்கூட்டத்தில் பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேட்டியின் போது கூறுகையில், "புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கான நேர சலுகை அதாவது வெள்ளிக்கிழமை மற்றும் 2 மணி நேரம் நேர சலுகை நடைமுறைக்கு வந்து இருக்கிறது இது தொடர்பாக அரசு பணியாளர் அனைவரும் தங்களுடைய மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.
இந்த இரண்டு மணி நேரத்தை அரசு பெண் ஊழியர்கள் பயனுள்ளதாகவும் பலன் உள்ளதாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும் பெண் ஊழியர்களுக்கு கடுமையான உழைப்பிற்கு இது ஒரு சிறந்த பரிசு என்று குறிப்பிட்டு இருந்தார் ஆனால் சிலர் இந்த ஒரு நேர சலுகை திரும்ப பெற வேண்டும் என்று தொடர்ச்சியான முறையில் வலியுறுத்தி வருகிறார்கள். இது பெண் அடிமைத்தனம் என்று கூறுகிறார்கள். இவர்கள் எப்படி பெண்ணுரிமை என்ன என்பதை புரிந்து கொள்ள போகிறார்கள்? என தெரியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
Input & Image courtesy: The Hindu