Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி முதல்வர் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மகளிர் கூட்டம்: அப்படி என்ன தெரியுமா?

புதுச்சேரியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்று இருக்கிறது.

புதுச்சேரி முதல்வர் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மகளிர் கூட்டம்: அப்படி என்ன தெரியுமா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 March 2023 2:02 AM GMT

எத்தகைய தலைமையிலான அரசாங்கமாக இருந்தாலும் சரி, அவர்கள் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் மரியாதை கொடுப்பதன் மூலமாக அவர்கள் தனி இடத்தை பெற முடியும். குறிப்பாக தேர்தலில் அவர்களால் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற முடியும். வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை தவறாமல் செய்து வருவதன் மூலமாக அதிகமான மகளிர் வாக்குகளை அவர்களால் பெற முடியும். அந்த வகையில் தமிழகத்தில் அதிக மகளிரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டம்தான் இலவச பேருந்து திட்டம். பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தின் மூலமாக பல்வேறு பெண்கள் இதனுடைய பயனை அனுபவித்து வருகிறார்கள்.


அந்த வகையில் தற்போது புதுச்சேரியிலும் பெண்கள் இலவசமாக பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என்றும் புதுசெய்தி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தன்னுடைய பட்ஜெட்டில் அறிவித்து இருக்கிறார். இது அங்கு பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பெண்களுக்கு பல்வேறு முக்கியத்துவம் தரும் வகையில் நடவடிக்கைகளும் திட்டங்களும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இளம் விதவைகளுக்கான ஊக்கத் தொகை இரண்டாயிரத்தில் இருந்து தற்போது 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.


வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும் தனியார் பங்களிப்பு முதலீட்டின் மூலமாக இனி கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்தப்படும் என்றும் அறிவிப்பில் தகவல் வெளியாகி இருக்கிறது.

Input & Image courtesy:Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News