Kathir News
Begin typing your search above and press return to search.

திருநங்கைகளுக்கு இலவச மனைப்பட்டா, 1 லட்சம் பணம்... அதிரடி காட்டிய புதுச்சேரி அரசு...

திருநங்கைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும்.

திருநங்கைகளுக்கு இலவச மனைப்பட்டா, 1 லட்சம் பணம்... அதிரடி காட்டிய புதுச்சேரி அரசு...
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 April 2023 2:17 AM GMT

புதுச்சேரியில் உள்ள திருநங்கைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும், அவர்களது வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார். திருநங்கைகள் தினவிழா புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மற்றும் சமூக நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில், திருநங்கைகள் தினவிழா கம்பன் கலையரங்கில் நேற்று மாலை நடந்தது. இந்த விழாவிற்காக சமூக நலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கி நிகழ்ச்சியை நடத்தி வைத்து இருக்கிறார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார்.


நலத்துறை செயலர் உதயகுமார், மாவட்ட கலெக்டர் வல்லவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் இந்தியாவின் முதல் வக்கீல் சத்திய ஸ்ரீ ஷர்மிளா, அழகு கலை நிபுணர் தர்ஷினி, சமூக ஆர்வலர் லட்சிதா, பாடகர் கோபிகா, பொது ஆர்வலர் தன்சிகா ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அப்போது திருநங்கைகள் தங்களுக்கான அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்து இருந்தார்கள்.


இதைத்தொடர்ந்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அவர்கள் இது பற்றி கூறுகையில், புதுவை மாநிலத்தில் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து திருநங்கைகளுக்கு அரசு சார்பில் அவரவர் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்தப்படும். மேலும் அவர்களுக்கு இலவச மனைப்பட்டாவும், வீடு கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை வேலைப்வாய்ப்பில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் கூறினார்.

Input & Image courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News