புதுச்சேரி: 5,000 இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு.. அரசு அறிவிப்பு..
5,000 இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க புதுச்சேரி அரசு அறிவிப்பு.
By : Bharathi Latha
புதுச்சேரியில் தற்பொழுது பயிற்சி நிறைவு பெற்ற காவலர்கள் அதன் நிறைவு விழா கோரிமேடு போலீஸ் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. புதுச்சேரியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 382 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 2022 ஜூன் மாதம் ஆறாம் தேதி பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள். தற்போது ஒரு ஆண்டு பயிற்சி நிறைவு பெற்றதை தொடர்ந்து அதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள்.
அப்பொழுது பயிற்சி நிறைவு பெற்ற காவலாளர்களின் மரியாதை செய்யும் பயிற்சியில் கலந்து கொண்டு முதலமைச்சர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் வேலையில் சேர இருக்கும் காவலாளர்களிடம் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறும் பொழுது புதுச்சேரியில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் 5000 இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
பின்னர் பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கினார். போலீசார் பொதுமக்களின் நண்பராக இருந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும். இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக காவல்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. எங்கள் அரசு பொறுப்பேற்ற பின்னர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உறுதி அளித்தோம் அதன்படி தற்போது காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது என கூறினார்.
Input & Image courtesy: News