புதுச்சேரி: அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது?
புதுச்சேரியில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்பொழுது தொடங்கும்?
By : Bharathi Latha
புதுச்சேரியில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. தற்போது அதற்கான தடை நீக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஒரு மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் 180 மாணவர்கள் MBBS பாடப்பிரிவில் சேர்க்கப் படுகிறார்கள்.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ ஆணையம் அனுமதி மறுத்தது. கண்காணிப்பு கேமரா வசதியில்லாமை, ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறையை செயல்படுத்தாதது ஆகியவற்றை காரணம் காட்டி மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த ஒரு நடவடிக்கை காரணமாக புதுச்சேரி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கும் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் தரப்பில் உத்தரவு வழங்கப்பட்டது.
மேலும் மருத்துவக்கல்லூரியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் உடனடி ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்பொழுது மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கல்லூரியில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்டு மேலும் ஆணையத்திடம் அனுமதி வழங்கப்பட விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News