புதுச்சேரி: வாகன அழிப்பு கொள்கையை அறிவித்த அரசு.. மாற்றத்தில் அரசு பேருந்துகள்..
புதுச்சேரியில் 15 ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகள் நிறுத்தம்.
By : Bharathi Latha
புதுச்சேரியில் உள்ள 15 ஆண்டுகள் காலாவதியான மற்றும் அரசு பேருந்துகள் மே 1 முதல் நிறுத்தப்படும் என்று புதுச்சேரி அரசின் சார்பில் அறிவித்துள்ளது. மத்திய அரசின் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வாகன அழிப்புக் கொள்கையை அறிவித்து இருந்தது. இதில் குறிப்பாக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள தனியார் நபர்களின் வாகனங்களும் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள அரசு வாகனங்களும் மாற்றம் செய்யப்பட வேண்டும். பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.
மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, முதற்கட்டமாக, மாநில அரசு, யூனியன் பிரதேசங்களுக்கு சொந்தமான 15 இதர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஏப்ரல் 2023, ஒன்றாம் தேதி பின்னர் இயக்குவதற்கு மத்திய சாலை மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலை அம்சகம் தடைவிதித்து இருந்தது. குறிப்பாக அரசு பேருந்துகள் 15 வருடங்களை கடந்த பிறகு அவற்றை மீண்டும் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அரசு பேருந்துகளை பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் களமிறங்கி இருக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரி சாலை போக்குவரத்து துறையால் இயக்கப்பட்டு வந்த 130 பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு தற்போது 50 பேருந்துகள் மட்டுமே இயங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவை அடுத்து RTO, 15 ஆண்டுகள் கடந்த பேருந்துகளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் புதுச்சேரி காரைக்காலுக்கு இடையில் இயக்கப்படும் பேருந்துகள், காரைக்கால் மற்றும் கோவை கடையை இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar