புதுச்சேரியில் அரசு பள்ளி... ரூ.15 லட்சம் செலவில் புதிய வகுப்பறை!
புதுச்சேரியில் அரசு பள்ளியில் சுமார் 15 லட்சம் செலவில் புதிய வகுப்பறைகள்.
By : Bharathi Latha
புதுச்சேரி மாவட்டம் அரசு பள்ளியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு சிபிஎஸ்சி தரத்தில் பாடத்திட்டங்கள் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பாடத்திட்டங்கள் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களும் வந்தது. இத்தகைய சூழ்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக புதுச்சேரி அரசு பள்ளி மாறி வருகிறது என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அரசு ஆரம்ப பள்ளியில் எம்.பி வைத்தியலிங்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் செலவில் புதிதாக ஒரு வகுப்பறை கட்டித் தரப்பட்டு இருக்கிறது. வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணியில் தொடக்க விழா தற்போது சிறப்பாக நடைபெற்று துவங்கப்பட்டிருக்கிறது. விழாவில் வைத்திலிங்கம் எம்.பி., சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை நடத்தி பணிகளை தொடங்கி வைத்து இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், கல்வித்துறை இணை இயக்குனர் சிவராமரெட்டி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Input & Image courtesy: India