புதுச்சேரி: அரசு ஊழியர்களுக்கு 7- வது எம்.ஏ.சி.பி திட்டம் அமல்!
புதுச்சேரியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி எம்.ஏ.சி.பி திட்டம் அமல்.
By : Bharathi Latha
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி திருத்தப்பட்ட எம்.ஏ.சி.பி திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி இருந்த நிலையில் தவறுதலாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அது குறித்து விலக்கு அளிக்க அரசு துறைகளுக்கு தற்போது உத்தரவிட்டப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அரசுத்துறை அதிகாரிகளுக்கு இது ஒரு ஜாக்பாட் ஆக அமைந்து இருக்கிறது.
எம்.ஏ.சி.பி திட்டம் என்பது பொதுச் செயலில் இருக்கும் அரசு பணிகள் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி கிரேடு பே முரண்பாடுகளை களைய 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருத்தப்பட்ட இந்த ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக புதுச்சேரியில் இருக்கும் அரசு ஊழியர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு பெற வேண்டும். அப்படி பதவி உயர்வு பெறாத அரசு அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு அவர்களுடைய நிலைகளுக்கு இருப்பவாறு தர வேண்டும்.
மாற்றியமைக்கப்பட்ட உறுதியான பணி முன்னேற்றம் திட்டத்தின்படி, தானாகவே அடுத்த சம்பள நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். ஆனால் இந்த சில ஆண்டுகளாக இந்த இந்த ஊதிய குழுவின் பரிந்துரைப்படி இந்த ஒரு திட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் தற்பொழுது இதில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் இன மத்திய அரசு தெரிவித்து இருப்பது அனைவரின் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.
Input & Image courtesy: News