காசி தமிழ் சங்கம் புதுவை அறிஞர்களும் பங்கேற்பு: மோடிக்கு நன்றி கூறிய தமிழிசை சௌந்தரராஜன்!
காசி தமிழ்ச் சங்கம் என்பது ஒரு அற்புதமான நிகழ்வு என்று இதை ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி தெரிவித்தார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
By : Bharathi Latha
உலக குழந்தைகள் துஷ்பிரயோக தடுப்பு தடை தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தலைமை தாங்கினார். மேலும் இந்த தலைமையில் அவர் உரையாற்று கையில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கான அடிப்படைத் தேவைகள் என்றும் தடை ஏற்படக்கூடாது.
உலக அளவில் 60% குழந்தைகள் இரத்த சோகையினால் பாதிப்பு இருப்பதாக ஆய்வு தகவல்களை கூறுகிறது. எனவே குழந்தைகளுக்கு கல்வி உணவு ஆகிய அடிப்படை உணவை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் மதிய உணவு திட்டமானது சத்தானதாக வீட்டிற்கு சென்ற நோக்கில் மத்திய அரசு சிறுதானிய உணவுகளை மதிய உணவு திட்டத்தில் சேர்த்தது. இதன் காரணமாக இந்த ஆண்டில் சிறுதானிய ஆண்டாக்கு மத்திய அரசு கொண்டாடி வருகின்றது.
பாரதப் பிரதமரின் சீரிய நிகழ்ச்சிகள் காரணமாக தற்போது கழிப்பறை இல்லாத பள்ளிகள் பார்க்க முடிவது கிடையாது. பல்வேறு பள்ளிகளில் தற்பொழுது தூய்மையான கழிப்பறை கொண்டுவரப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் இருந்தும் தமிழ் அறிஞர்கள் சென்று இருக்கிறார்கள். தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே கலாச்சாரம் பிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. எனவே இதை ஏற்பாடு செய்த பிரதமர் மோடி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். மேலும் குழந்தைகள் பாலியல் தொந்தரவு செய்யப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகிறது. மேலும் இது சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் மக்களை சம்பந்தப்பட்ட துறையினர் கடுமையாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.
Input & Image courtesy: Dinamani