Kathir News
Begin typing your search above and press return to search.

BREAKING:புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் எப்போது ? மாநில தேர்தல் ஆணையர் தகவல்.

புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்த மாநில தேர்தல் ஆணையம் 5 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளிலும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

BREAKING:புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் எப்போது ? மாநில தேர்தல் ஆணையர் தகவல்.

ThangaveluBy : Thangavelu

  |  22 Sep 2021 10:07 AM GMT

புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்த மாநில தேர்தல் ஆணையம் 5 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளிலும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அறிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதற் கட்டமாக காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டமாக புதுச்சேரி, உழவர்களை நகராட்சிகளுக்கும், மூன்றாம் கட்டமாக அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம், வில்லியனூர் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும், 5 நகராட்சி சேர்மன் மற்றும் 116 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 1149 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 31ம் தேதிக்குள் எண்ணப்படுகிறது.

Source, Image Courtesy: Dailythanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News