Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கலாச்சார விழா கோலாகலம்!

புதுச்சேரியில் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கலாச்சார விழா நிறைவுபெற்றது.

புதுச்சேரி: தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கலாச்சார விழா கோலாகலம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 March 2023 1:01 AM GMT

காரைக்காலில் மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரியில் கலாச்சார குழு சார்பாக நடத்தப்பட்ட கலாச்சார விழா வின் நிறைவு விழா நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிறைவுவிழாவில் திரு. ஆர்.கமலக்கண்ணன், மண்டலத் தலைவர், பாங்க் ஆப் பரோடா, கழகத்தின் இயக்குனர் முனைவர் கி. சங்கரநாராயணசாமி மற்றும் கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன் இவர்கள் மூவரும் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.


இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து ஏறக்குறைய 462 பங்கேற்பாளர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்று சென்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் இறுதியாக முனைவர் வெங்கடேசன், அவர்கள் தனது நன்றிவுரையில் பங்கேற்பாளர்களிடமிருந்து நிறைய நேர்மறையான கருத்துக்களைப் பெற்றோம்.


நிகழ்ச்சிகளின் தரம், ஏற்பாட்டாளர்களின் தொழில்முறை மற்றும் விழாவின் வரவேற்பு சூழ்நிலை ஆகியவற்றை அவர்கள் பாராட்டினர். இருப்பினும், மேம்பாட்டிற்கான சில பரிந்துரைகளையும் நாங்கள் பெற்றுள்ளோம், அதை நாங்கள் கவனித்துள்ளோம், அடுத்த கலாச்சார விழாவில் புதுமை புகுத்த முயற்சிப்போம் என்று கூறினார். மேலும் அவர் இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திமுடித்ததற்கு உறுதுணையாக இருந்த நிதிஉதவியாளர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இவர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News