Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: திருக்குறளை மேற்கோள் காட்டி, எதிர்க் கட்சியினரை மிரள வைத்த பிரதமரின் உரை.!

புதுச்சேரி: திருக்குறளை மேற்கோள் காட்டி, எதிர்க் கட்சியினரை மிரள வைத்த பிரதமரின் உரை.!

புதுச்சேரி: திருக்குறளை மேற்கோள் காட்டி, எதிர்க் கட்சியினரை மிரள வைத்த பிரதமரின் உரை.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Feb 2021 5:56 PM GMT

காரைக்காலில் ரூ.491 கோடி மதிப்பிலான ஜிப்மர் கிளை மருத்துவமனை உள்பட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அரசு முறை பயணமாக புதுச்சேரி மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசியல் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், ஜிப்மர் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அங்கு காணொலி காட்சி வழியாக விழுப்புரம் – நாகை இடையில் ரூ.2 ஆயிரம் கோடியினாலான 4 வழிச்சாலை, சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ. சாலை பணி, ரூ.491 கோடியில் காரைக்காலில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ. 44 கோடியில் சிறிய துறைமுக மேம்பாட்டு பணி மற்றும் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் ரூ. 78 கோடியில் 400 மீட்டர் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்க பணி என மொத்தம் ரூ.3023 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், புதிய மக்கள் பயனடையவே புதிய சாலைகளும், இளைஞர்கள் விளையாட்டில் திறன் பெறவும் புதிய விளையாட்டு மைதானம் கைகொடுக்கும். தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நோக்கில் ஜிப்மர் மருத்துவமனையில் ரத்த ஆய்வு பிரிவு தொடங்கப்படுகிறது. பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக புதுச்சேரி இருக்கிறது. புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். புதுச்சேரி மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர், எனக் கூறினார். 'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, மாணவர்களுக்கு கல்விதான் சிறந்த செல்வம் எனக் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News