புதுச்சேரி: சுற்றுலா மேம்பாட்டிற்காக 150 கோடி செலவில் திட்டங்கள்..
ரூ.150 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் புதுச்சேரியில் தொடங்கப்பட்டு இருக்கிறது.
By : Bharathi Latha
மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் புதுவை மாநிலத்தில் உள்ள பல்வேறு கோவில்கள், சுற்றுலா தலங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.தற்போது அந்த வகையில் G20 யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் சுற்றுலா தளங்கள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது அதன்படி சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள புதுவை, காரைக்கால் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இங்கு இருக்கும் பகுதிகளில் சுமார் 150 கோடி செலவில் மேலும் பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சரியான திட்டம் வரைபடங்கள் மற்றும் விளக்க படங்களை தயாரிப்பதற்காக அறிக்கையை மத்திய சுற்றுலா அமைச்சகம் ஹைதராபாத்தில் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் தேர்வு செய்து இருக்கிறது. இதுதொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த ஒரு நிகழ்ச்சி முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, தனியார் நிறுவனத்தின் தலைவர் ரத்தீஷ் ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். அப்போது புதுச்சேரி சுற்றுலாத்துறைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் முதலமைச்சர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: Thanthi News