Kathir News
Begin typing your search above and press return to search.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற நடிகர் அணி!

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற நடிகர் அணி!

ThangaveluBy : Thangavelu

  |  18 July 2022 1:24 PM GMT

புதுச்சேரி துத்திப்பட்டு சி.ஏ.பி. கிரிக்கெட் மைதானத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் பங்கேற்கின்ற இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 6 அணிகளாகப் பிரிந்து 9 போட்டிகள் நடைபெற்றது.

மேலும், இப்போட்டியில் நடிகர் ம.கா.பாவின் சில்க் ஸ்மிதா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. திரைப்பட நடிகர் மகேந்திரன் அணியானது 2வது இடத்தை பெற்றது.

அதன்படி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா துத்திப்பட்டு சி.ஏ.பி. கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. பரிசளிப்பின்போது நடிகை நிரோஷா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா மற்றும் சுற்றுலாத்துறை செயலர் அருண் மற்றும் மார்க் மேலாண் இயக்குனர் நந்தகுமார் உள்ளிட்டோர் பலர் பங்கேற்று மா.க.ப. அணிக்கு கோப்பை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News