Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி வீரர், வீராங்கனைகள் ஜார்கண்ட் பயணம்!

புதுச்சேரி வீரர், வீராங்கனைகள் ஜார்கண்ட் பயணம்!

ThangaveluBy : Thangavelu

  |  29 July 2022 11:08 AM GMT

தேசிய அளவிலான 16வது சீனியர், ஜூனியர், சப்ஜூனியர் ஜம்ப்ரோப் சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் 3 நாட்கள் நடைபெற இருக்கிறது.

அதன்படி இந்த போட்டியில் பங்கேற்க உள்ள புதுச்சேரி வீரர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி பிரெசிடென்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பாரத் ஜம்ப்ரோப் அசோசியேஷன் ஆப் புதுவை தலைவரும் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி தாளாளருமான கிருஸ்துராஜ் வீரர்களுக்கு சீருடை வழங்கி வழியனுப்பினார். மேலும், பாரத் ஜம்ப்ரோப் அசோசியேஷன் ஆப் புதுவை பொது செயலாளர் ஞானசேகரன், விஷ்வசுந்தரம், அருள்ராஜ், டாக்டர் பிருந்தா சுரேஷ் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News