அடுத்த வாரம் முதல் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தகவல்!
புதுச்சேரியில் அடுத்த வாரம் முதல் மழை நிவாரணம் வழங்கும் பணி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
By : Thangavelu
புதுச்சேரியில் அடுத்த வாரம் முதல் மழை நிவாரணம் வழங்கும் பணி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பெண்களுக்கான ஓட்டுனர் உரிமம் மற்றும் கூடுதல் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு போக்குவரத்து துறை சார்பில் சனிக்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வாரத்திற்கான நிகழ்ச்சி 100 அடி ரோட்டில் உள்ள போக்குவரத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை வகித்தார். அமைச்சர் சாய் சரவணன் குமார் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பெண்கள் பழகுநர் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் அவர் பேசும்போது, வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் என்பது மிக முக்கியமானது. எனவே எதாவது விபரீதம் நடைபெற்றால் ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே இழப்பீடு பெற முடியும். எனவே அனைவரும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் எடுக்க வேண்டும். மேலும், அரசு கூறியது போன்று நிவாரணம் வழங்கப்படும். ஒரு சிலர் கேட்கிறார்கள். அறிவித்தவுடனே நிவாரணம் வழங்க முடியுமா? நிவாரணம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அடுத்த வாரம் முதல் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கும் பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Daily Thanthi