Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் விஜய்யை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்ததில் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்!

நடிகர் விஜய்யை சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

நடிகர் விஜய்யை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்ததில் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  7 Feb 2022 2:39 AM GMT

நடிகர் விஜய்யை சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த நமச்சிவாயம், முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக இருக்கிறார். அவர் நடிகர் விஜய்யை சந்தித்ததில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. விஜய் சந்திப்பு பற்றிய யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. எங்களின் கூட்டணி வலுவாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News