Begin typing your search above and press return to search.
முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடி வழங்கினார்!

By :
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுவதற்காக என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேசியக்கொடி வழங்கும் விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தேசிய தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செய்த பின்னர் தேசியக்கொடிகளை வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன் மற்றும் பாஸ்கர் நேரு உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Maalaimalar
Next Story