புதுவை நகரில் ரூ.400 கோடியில் மேம்பாலம் !
புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக ரூ.400 கோடி மதிப்பில் இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி சிக்னலில் இரண்டு ஆண்டுகளில் மேம்பாலங்கள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
By : Thangavelu
புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக ரூ.400 கோடி மதிப்பில் இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி சிக்னலில் இரண்டு ஆண்டுகளில் மேம்பாலங்கள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி நகர் பகுதியில் தினந்தோறும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சாலை வசதி, மேம்பாலங்கள் இல்லாததால் இவை நிகழ்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதிலும் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி சிக்னல் பகுதிகள் நகரின் முக்கிய பகுதியாக விளங்குகிறது. புதுச்சேரி நகருக்கு வரும் வாகனங்கள் நகரில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் இந்த வழியைத்தான் பயன்படுத்த வேண்டும். இதனால் கிழக்கு கடற்கரை சாலை 100 அடி சாலையில் அமைந்துள்ள இந்த சிக்னல்களை கடந்து செல்வது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த இரு இடங்களிலும் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் எனற கோரிக்கைகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், 2 சிக்னல்களிலும் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று அரும்பார்த்தபுரம் மேம்பால திறப்பு விழாவின்போது மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த மேம்பாலங்கள் தற்போது ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Daily Thanthi
Image Courtesy:Maalaimalar