Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இல்லை!

புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்றும், 9ம் முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இல்லை!

ThangaveluBy : Thangavelu

  |  12 Nov 2021 3:39 AM GMT

புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்றும், 9ம் முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக புதுச்சேரியில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் கொரோனா குறைந்து வரும் நிலையில், 9 முதல் 12ம் வகுப்புக்களுக்கு மட்டம் பள்ளிகள் சுழற்சி முறையில் நடைபெற்று வந்தது.

இதனிடையே தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படுவது இல்லை என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அந்த வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு வழக்கம் போல ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy: Jagran Josh


Next Story
கதிர் தொகுப்பு
Trending News