புதுச்சேரி: ஆந்திர மாநில பூங்காவிற்கு தயாராகும் 100 சிற்பங்கள்!
புதுச்சேரியில் இருந்து 100 சிற்பங்கள் ஆந்திர மாநில பூங்காவிற்கு வைப்பதற்கு தயாராகி வருகிறது.
By : Bharathi Latha
புதுவை விருகம்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தில் உள்ளூர் கலைஞர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் அரங்குகள் அமைத்து கைவினைப் பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புதுச்சேரியில் சுற்றுச்சூழல் சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தனி கருத்தரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இங்கு தத்துருவமாக வடிவமைக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் சிற்பம் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அழிந்து வரும் காடுகளில் வனவிலங்குகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும ஏற்படுத்தவும், அவற்றை மீட்கும் விதமாக சிற்பங்கள் உருவாக்கப்பட்ட அவற்றை அரங்கில் வைக்கும் முயற்சிகளும் அரங்கேறி வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இதை பார்த்தும் வாங்கியும் செல்கிறார்கள்.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் குறைந்த ஆர்டர்கள் தற்போது விலங்கு மற்றும் பறவை சிற்பக் கலைஞர்களுக்கு ஆறுதலாக இருந்தது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மிருகங்களின் சிலைகளும் அரங்கில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கு உருவான விலங்குகளின் சிலைகள் ஜார்கண்ட், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தற்போது பறவை விலங்குகள் என 100 சிற்பங்கள் தயாராகி வருகிறது.
இவை ஆந்திர மாநிலத்தில் உள்ள நகர்வலம் பூங்காவில் வைக்கப்பட இருக்கிறது. இதைப்போல் பிற மாநில பூங்காக்களுக்கும் புதுச்சேரியில் தயாராகும் சிற்பங்கள் செல்ல இருக்கிறது. முருகபாக்கம் கைவினை கிராமத்திற்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த வனவிலங்கு சிலைகள் முன் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து வருகிறார் வருகிறார்கள் என்றும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Maalaimalar News