புதுச்சேரி - தி.மு.க, ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம்!
தி.மு.க MP ஆ. ராசாவின் கண்டித்து இந்து முன்னணி சார்பில் புதுச்சேரியை நாளை முழு அடைப்பு போராட்டம்.
By : Bharathi Latha
புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்ற நமச்சிவாயம் அமைச்சர் கூறியிருக்கிறார். நாளை புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக பேசிய தி.மு.க MP ஆ. ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் இந்த முழு அடைப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குப் புதுச்சேரி உள்ள பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இருந்தாலும் நாளை இந்த போராட்டம் நடைபெற உள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேர்வு நடைபெற இருப்பதாலும் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என்று நோக்கத்தினாலும் முழு அடைப்பு போராட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பேச்சுவார்த்தை இருந்த நிலையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, போலீஸ் சூப்பிரண்டு தீபிகா முன்னிலையில் இந்து முன்னணி மாநில தலைவர் சுனில் குமார் மற்றும் நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்பொழுது அவரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் கூறுகையில் பொதுமக்கள் மாணவர்கள் வணிகர்கள் நலன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தையின் போது பொதுமக்கள் தங்களுக்கு அதர்வாண வகையில் இருப்பதாக இந்து முன்னணியினர் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் பள்ளி குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தான் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றுதான் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:Thanthi News