Begin typing your search above and press return to search.
வில்லியனூர் சிவசுப்பிரமணியர் கோயில் தேரோட்டம்: வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிய எம்.எல்.ஏ!
By : Thangavelu
புதுச்சேரி, வில்லியவூர் வள்ளிதேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தை சிவா எம்.எல்.ஏ., வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் 4 மாட வீதிகளில் தேர் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து வழிப்பட்டனர். இதனை தொடர்ந்து சாமீ வீதி உலா வருகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் அறங்காவலர் பாண்டியன் தலைமையிலான குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi
Next Story