Son-ஐ வைத்து வந்தவர்களுக்கு சன்னியாசியை பற்றி எப்படி தெரியும்.. புதுச்சேரி கவர்னர் தமிழிசை தாக்கு..
By : Bharathi Latha
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் அமைந்துள்ள ஆதி அமரநாயகி உடனமர்ந்த ஆதிசங்கரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்ட அதன் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இது பற்றி அவர் கூறுகையில், "இளம் வயதாக இருந்தாலும் சன்னியாசியாக இருந்தால் காலில் விழுவது எனது பழக்கம்" என ரஜினியே விளக்கமளித்துவிட்டார்.
ஆனாலும் யோகி ஆதித்யநாத் யோகியா சன்னியாசியா என முரசொலி ஆராய்ச்சி செய்கிறது. யோகி ஆதித்யநாத் 5 முறை எம்பியாக இருந்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது. ஆனால் அவருடைய பார்வையில் தமிழகத்தில் தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள் அது உண்மை கிடையாது.
ஆன்மீகவாதிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள். கிராமப்புறங்களில் உள்ள கோயில்கள் பராமரிக்கப்பட வேண்டும். கோயில் வருமானத்தை கோயில்களுக்கு செலவிட வேண்டும். கோயில்களை நல்ல முறையில் பராமரித்து அர்ச்சகர்களுக்கு அதிக அளவில் சன்மானம் வழங்க வேண்டும். ராமராஜ்ஜியம் என்றால் கிராம ராஜ்ஜியம். கிராமத்தில் ஆன்மீகம் தழைத்தோங்க வேண்டும். யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்ததை விமர்சிக்கிறார்கள். அதில் என்ன பிரச்சனை இவர்களுக்கு என்று புதுச்சேரி கவர்னர் தமிழசை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Input & Image courtesy: News