G20 லோகோவை தத்ரூபமாக வரைந்த மாணவிகள்: பாராட்டிய புதுச்சேரி சபாநாயகர் செல்வம்!
G20 லோகோ வரைந்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து சான்றுகளும் அளிக்கப்பட்டு இருக்கிறது.
By : Bharathi Latha
G20 மாநாட்டிற்கு இந்தியா இந்த வருடம் தலைமைப் பொறுப்பு வகித்து இருக்கிறது. குறிப்பாக 2022 டிசம்பர் மாதம் இந்தியா தன்னுடைய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு இருக்கிறது. 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த ஒரு வேலையில் இந்தியாவின் மிகச் சிறந்த தலைமை பொறுப்பிற்கு அங்கம் வகிக்கும ஒரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில் G20 மாநாட்டின் முதல் கூட்டத்துடன் வரவேற்கும் விதமாக புதுச்சேரியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் G20 லோகோவை தத்துவமாக வரைந்து இருக்கிறார்கள்.
புதுச்சேரியில் G20 மாநாட்டின் தொடக்க நிலை மாநாடு நடைபெற்றது. இவற்றை வரவேற்கும் விதமாக விழிகள் அறக்கட்டளை சார்பில் சிறப்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் ஜி-20 லோகோவை பிரம்மாண்டமாக வருக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆறாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
கௌசிகா மற்றும் வாணிஸ்ரீ ஆகிய இரண்டு மாணவிகள் G20 லோகோவை வரைந்து இருக்கிறார்கள். இந்த இரண்டு மாணவிகளும் சேர்ந்து 52 ஆகிறது சதுர அடியில் 3500 கிலோ கலர் கோலப்பொடிகளை கொண்டு இருபது மணி நேரம் செலவு செய்து இந்த ஒரு நிகழ்ச்சியில் முழுமையாக செய்து இருக்கிறார்கள். இதற்காக அவர்களை பாராட்டி புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பாராட்ட சான்றிதழ்களை வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Thanthi News