பிரதமரின் லட்சியங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் - அண்ணாமலை
By : Thangavelu
புதுச்சேரி மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி 2வது நாளான திருச்சி இளங்குமார் சம்பத் மனித நேயம் பற்றி விளக்கினார். வரலாறு, வளர்ச்சி பற்றி மாநில தலைவர் சாமிநாதன் கூறினார். மேலும், பிரதமரின் நலத்திட்டங்கள் தொடர்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். அதனை தொடர்ந்து தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா மற்றும் தமிழக பா.ஜ.க. செயலாளர் சூர்யா, வெங்டேஷன் உள்ளிட்டோர்களும் உரையாற்றினர்.
. @BJP4TamilNadu State President Shri @annamalai_k ji trained the participants at day 1 State training Camp.@JPNadda @blsanthosh @BlrNirmal @ShriSamiNathan @ANamassivayam @BJP4TamilNadu pic.twitter.com/q6zh3vjre1
— BJP Puducherry (@BJP4Puducherry) May 27, 2022
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது: 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் அனைத்து மக்களுக்கும் வங்கி கணக்கு, மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா, செல்வமகள், திறன் மேம்பாடு மற்றும் முத்ரா வங்கி கடன் திட்டம், வேலைவாய்பபு, இலவச எரிவாயு அடுப்பு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், விவசாயிகளுக்கு நேரடி மானிய திட்டங்கள், 18 ஆயிரத்து 500 கிராமங்களுக்கு மின்வசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பிரதமரின் லட்சியங்களையும், திட்டங்களையும் உணர்வுப்பூர்வமாக நாட்டு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Source: Maalaimalar
Image Courtesy: Twitter