புதுச்சேரி கடற்கரையில் சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகையால் பரபரப்பு!
புதுச்சேரி கடற்கரை சாலையில் சுனாமி பேரிடர் மீட்பு படையினர் திடீரென்று நடத்திய ஒத்திகையால் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரம்பரியம் மற்றும் கலாசார கட்டிடங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் பேரிடர் வந்தால் எப்படி அதனை கையாள்வது பற்றிய விழிப்புணர்வை புதுச்சேரி அரசு மேற்கொண்டது.
By : Thangavelu

அதன்படி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தலைமையிலான வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை துறை அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கலந்து கொண்டனர். அதன்படி புதுச்சேரி கடற்கறை சாலை காந்தி திடலில் இந்த சுனாமி ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஒத்திகையில் சுனாமி ஏற்பட்டால் எப்படி பொதுமக்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்ற செய்முறைகளை மீட்பு படையினர் நடத்தி காட்டினர். இந்த திடீர் ஒத்திகையால் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் நடந்தவற்றை கேள்விப்பட்ட பின்னரே பெருமூச்சு விட்டனர்.
Source, Image Courtesy: Daily thanthi